Saturday, May 17, 2025

சாமி பூமி (1)

    இந்த முறை vacation tripஐ விரிவாக்கம் செய்து நாங்கள் Manaali மற்றும் 
Shimla சென்று வந்தோம். இதுவரை நாங்கள் God’s own country, Coorg மற்றும் 
Goa மட்டுமே சென்றிருந்தோம். So இது extension of our horizons தான். Manaali 


adventures மேற்கொள்ளக்கூடிய ஒரு அழகானமலைப்பிரதேசம்.
அழகான பூமி, அமைதியான மக்கள்,அச்சம்தரும் குளிர், ஆர்ப்பரிக்கும்
நீரோடைகள், ஆகாயம்தொடும் பனிமலைகள் ஆரவார விளையாட்டுக்கள்
என ஆனந்தத்திற்க்கு அளவேயில்லா பூமி அது. சென்னை, புதுடெல்லி சண்டிகர்
என விமானத்தில் சென்று அங்கிருந்து கார் மூலம் மணாலி சென்றோம். 
நாங்கள் club Mahindra member என்பதால் travel desk மூலம் கார் arrange 
செய்திருந்தோம். மணீஷ் என்ற driver வந்திருந்தார். அவர் ஒரு ராஜபுத்ர இளைஞர்.
மிக மிக பணிவாக இருந்தார். என் மனைவி இந்தி படிப்பார். 
நான் ஓட்டை இந்தி பேசுவேன்.so சமாளித்து விடலாம் என்று நினைத்திருந்தேன்.
ஆனால் என் மகன் அழகாக இந்தியில் உரையாடியது என்னை ஆச்சரியப்படுத்திய
ஒரு revealation. நமக்கு தெரியாமலே நம் மக்கள் நம் கண் மறைவில் மிக 
அழகாக வளர்ந்துவிடுகிறார்கள். என் தாத்தாக்கள் இந்தி பேசியது அவர்கள்
ராணுவ வீரர்கள் என்பதினால். என் தந்தை ஒரு விமானப்படை அதிகாரி.
என் சித்தப்பா, மாமாக்கள் என அனைவரும் ராணுவ வீரர்களே. ஆனால்
அவர்கள் எங்களிடம் இந்தி பேசியதில்லை. நான் ஒரு மத்திய அரசு  
மருத்துவக் கல்லூரியில் பயின்றதால் இந்தி ஓட்டையாய் பேசுவேன். 
என் மனைவி இந்தி பயின்றவள். ஆனால் என் மகனோ தமிழக மருத்துவக்
கல்லூரியில் பயின்றவன்.அதனால்தான் இந்த ஆச்சரியம். 
நிற்க, மணீஷோ எங்களுடன் சரளமாக உரையாடமுடிகிறதென்றும்,
south Indian என்றதும் மொழிப்பிறச்சனை இருக்கும் என நினைத்ததாகவும்
எங்களால் அவருக்கு இரட்டிப்பு சந்தோஷம் எனவும் கூறினார்

Friday, February 14, 2025

 ராஜா by ராகா



இன்று ரஞ்சனி காயத்ரி சகோதரிகளின் ராஜா by ராகா என்ற ஒரு இசைத் தொகுப்பை கேட்டேன். இதை விட சமீபங்களில் ராஜாவிற்கு பெருமை சேர்க்கும் ஒரு நிகழ்வு எதுவும் நடந்ததாக எனக்கு நினைவில்லை. எனக்கு இசை அறிவு இல்லை என்பதையே நான் மறந்து கர்னாடக சங்கீதத்தை இந்த அளவுக்கு என்னாலும் ரசிக்க முடியும் என்று அன்றுதான் நான் அறிந்து கொண்டேன். சட்ஜமத்தில் தொடங்கி நிஷாதம் வரை ஒரு ஸ்வரத்திற்கு ஒரு பாடல் என்று எடுத்து மிக அழகாக ஒரு medley பாடும்போது அதை இசைஞானி சிறு சபைக்கூச்சத்துடன் ரசித்தது அதைவிட அழகாய் இருந்தது. ராகபேதம் என்ற மற்றொரு கோர்வையும் மிக அழகு. ராஜாவின் பாடல்களை ஒரு பாமரனாய் ரசிப்பது ஒரு சுகம். டாக்டர் லாவண்யா, ப்ரியா பார்த்தசாரதி போன்றோரை கேட்டபின் கேட்டு ரசிப்பது ஒரு சுகம். soprano, alto,tenor, base மற்றும் lead, support என்றெல்லாம் பிறர் பேசக்கேட்டபின் கேட்டு ரசிப்பது மற்றொரு சுகம். இசையை அறிந்தவர் ராஜாவை ரசிப்பதில் ஒருவித incompleteness இருப்பது போல் ஒரு ஐயம். அவர்கள் intense ஆக ரசிக்கிறார்கள். ஆனால் அவர்கள் சார்ந்திருக்கும் இசைப்பிரிவில் அவர்களின் அறிவு, அந்த இசையில் அவர் செய்திருக்கும் நுணுக்கங்களை அனுபவிப்பதிலேயே அவர்களை கட்டிப்போட்டுவிடுகிறது. என்னைப் போன்று இசை அறிவற்றவர்கள் ஒலியுணர்வு மட்டுமே கொண்டவர்களாய் உள்ளபடியால் அவர் படைக்கும் ஒலியின் அதிர்வுகளை western, folk, karnatic என்று எல்லா தளங்களிலும் சென்று அது தட்டி எழுப்பும் உணர்வுகளில் லயித்து போகச் செய்கிறது. அவரிடம் எனக்கு ஏற்படும் அத்தனை முரண்களையும் just like that  புறந்தள்ளும் திறன் அவரது இசைக்கு உண்டு.

Monday, January 20, 2025

 

நீண்ட இடைவெளிக்குப் பிறகு blogஐ தொடர வேண்டும் என்ற ஆவலில் மீண்டும் எழுத ஆரம்பிக்கின்றேன். இடையில் எத்தனையோ நிகழ்வுகள். எழுதவேண்டும் என்று தோன்றும் போதெல்லாம் ஏதொ ஒன்று அதை தள்ளிபோகச்செய்து கொண்டே இருந்தது. எனது பெற்றோரின் மரணம் என்னை தாள இயலா மன அழுத்தத்தில் தள்ளி என் நாட்களையே அசையாமல் நிறுத்தியபோது என்னை நகர்த்தியதே என் மனையாள்தான். So back to writing.