Thursday, September 6, 2012

மரம் போல்வர் மக்கட்பண்பில்லாதவர்

          



     இந்த வார வெகுஜனப் பத்திரிகையொன்றில் இடம் பெற்றிருந்த கேள்வி பதில் பகுதியில் திரை இசை வல்லுநர் ஒருவரின் பதில் கண்டு அதிர்ச்சியும் வெறுப்பும் ஒரு சேர வந்தது. கேள்வியில் வாசகரின் ஆர்வம் தேங்கியிருந்தது எப்படி தெளிவாக தெரிந்ததோ அதுபோல பதிலில் இசை அமைப்பாளரின் ஆணவம் தெளிவாகத் தெரிந்தது. இதில் இவருக்கு பக்குவப்பட்ட மனது என்று வேறு சொல்லிக் கொள்கிறார். இதை வித்யாகர்வம் என்றோ தமிழ்ப்பற்று என்றோ சொல்லி சமாதானமாக முடியவில்லை.
                 இவர் மட்டும் என்றில்லை. நான் கல்லூரியில் படித்த காலத்திலும் இது போன்ற நிகழ்வொன்று நடந்தது. சக மாணவி ஒருவர் ஸ்பிக்மாகே நிகழ்ச்சிக்கு வந்த கண்ணன் அழைத்த பாடல் பாடிய கர்னாடக இசைப்பாடகர் ஒருவரிடம் genuine ஆக கேட்ட ஒரு சந்தேகத்திற்கு அப்பாடகர் முதலில் நீ என் கேள்விக்கு பதில் சொல் என்று அந்த மாணவியின் இசை அறிவை சபையின் முன்னே சோதனை செய்ய ஆரம்பித்தார். இசை அறிவு இல்லாமல் cheap publicity க்காக கேள்வி கேட்கக்கூடாது என்று அறிவுரை வேறு. கடைசியில் அந்த மாணவியிடம் அவர் மூக்குடைப்பட்டதுதான் மிச்சம். 
            இவர்களைப்போன்றவர்களின் இசையை ரசிக்க முடிகிற அளவிற்கு அவர்கள் அகந்தையை மற்றும் பண்பற்ற தன்மையை நம்மால் ரசிக்க முடிவதில்லை. Atleast   அந்த பத்திரிகையாவது தனது வாசகரின் மரியாதை கருதி அதை moderation செய்து இருக்கலாம்.

No comments:

Post a Comment